துப்பாக்கி

துப்பாக்கி

விஜய் -ன் துப்பாக்கி திரை விமர்சனம்



துப்பாக்கி விமர்சனம் இங்கும் படிக்கலாம்.
லிட்டில் இந்தியா,ரெக்ஸ் திரையரங்கம்.டிக்கட் விலை 15 டால்ர்கள்.கடந்த வருடம் போலவே இந்த வருட தீபாவளிக்கும் அதே விஜய் படம் அதே தியேட்டர்.

இரண்டு நாட்களுக்கு முன்பே பதிவு செய்தும் காலை காட்சிக்கு டிக்கட் கிடைக்கவில்லை.மதிய காட்சித்தான் கிடைத்தது.



கதை சுருக்கம்


நாயகன் விஜய் இந்திய ராணுவ அதிகாரி கூடவே DIA எனப்படும் DEFENCE INTELIGENT AGENCY ன் முக்கிய அதிகாரி. இன்னும்  ராணுவத்தின் ரகசிய பொறுப்புகள் சில இவர் கையில்...!!!

40நாள் விடுமுறையில் சிறப்பு ரயில் மூலம் காஷ்மீரில் இருந்து தன் சொந்த ஊரான மும்பைக்கு வருகிறார் விஜய்.வரும் இடத்தில் ஒரு பேருந்தில் குண்டு வெடிக்கிறது.குண்டு வெடிப்பிற்கு SLEEPER CELL எனப்ப்டும் தீவிரவாத குழுக்களே காரணம் என தெரிய வருகிறது.மேலும் மும்பையில் 12 இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டுள்ள இந்த தீவிரவாத குழுக்களின் சதியை முறியடித்து SLEEPER CELL ன் தலைவனை எப்படி அழிக்கிறார் என்பதே கதை.

சற்று விரிவாக..

படம் மும்பை ரயில் நிலையத்தில் ஆரம்பிக்கிறது.(இந்த ஸ்டைல மாத்தவே மாட்டிங்களாய்யா!!) விஜயின் வரவுக்காக அவரது குடும்பம் காத்திருக்கிறது. நாயகன் வரும் ரயில் இஞ்சின் கோளாறாக விஜயும் சக ராணுவ வீரர்களும் இறங்கி குட்டி புலி கூட்டம் என  ஆட்டம் போட்டு விட்டு மும்பை வந்தடைகின்றனர்.


மும்பை வந்த விஜயை வலுக்கட்டாயமாக பெண் பார்க்க அழைத்து செல்கிறது அவரது குடும்பம்.காஜல் அகர்வால் அடக்க ஒடுக்கமாக,கூச்ச சுபாவத்துடன் மாப்பிளைக்கு காபி கொடுக்கிறார்.

பெண்ணை பாட சொல்லுங்க என ஒருவர் குரல் எழுப்ப
மாப்ள போட்றுக்க மிலிட்டரி ட்ரஸ்க்கு ஜன கன மன தான் பாட முடியும் .என  ஒரு காமெடி அரங்கேறுகிறது.

பின் பெண்ணை பிடிக்கவில்லை என்கிறார் விஜய்.

அதற்கு சொல்லும் காரணம்
1. நீளமான கூந்தல் (சீவி முடிச்சி கிளம்ப ஒரு நாள் ஆகும்)
2.கூச்ச சுபாவம்
3.மாடர்னா இல்லை.


அடுத்தடுத்த காட்சிகளில் காஜலின் நிஜமான குணங்கள் இதுவல்ல என தெரியவ்ர பின் ஹீரோயினை  பிடித்திருக்கிறது என தொங்குகிறார் நம்ம ஹீரோ.

ஹிரோ பயணிக்கும் ஒரு பேருந்தில் குண்டு வெடிக்கிறது.பலர் உயிரிழக்கின்றனர்.குண்டு வைத்தவனை துரத்தி  பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்கிறார் நாயகன்.மும்பை காவல்துறை அவனை காயம் காரனமாக மருத்துவமனையில் சேர்க்கிறது.மருத்துவமனையில் டாகடர்களை சுட்டு விட்டு தப்பிக்க முயற்சிக்கிறான்.மறுபடியும் ஹீரோவிடம் மாட்டிக்கொள்கிறான். ஹீரோ அவனை தன் வீட்டிலையே அடைத்து சித்ரவதை செய்து உன்னை யார் தப்பிக்க வைத்தது என கேட்க...அதற்கு ஒரு அரசியல்வாதி பெயரை சொல்ல...


நம்ம ஹீரோ துப்பாக்கியுடன் அவர் வீட்டிற்கு செல்ல

நீ பெரிய ஆபத்தை தொட்டுட்ட...என்று சொல்லி தற்கொலை செய்து கொள்கிறார் அந்த அரசியல்வாதி.

இவன் SLEEPER CELL பிரிவை சேர்ந்தவன் என்றும் மேலும் இவர்கள் மும்பையில் 12 இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டு இருப்பதையும் அறிந்து கொள்ளும் நாயகன் அதையெல்லாம் முறியடித்து தீவிரவாதிகள் தலைவனை எப்படி அழிக்கிறார் என்பதுதான் மீதி கதை...




நடிகர் ஜெயராம் வரும் இடங்களில் ஹீரோ சற்று அடக்கியே வாசித்துள்ளார்.

விஜயின் நண்பனாக வரும் சத்யன் படம் முழுக்க ஹீரோவுடனே சுத்துகிறார்.

நடிகை காஜல், படத்தின் இடையிடையே  ஒன்னும் தெரியாத பாப்பாவாக வந்து கிளு கிளுப்பூட்டி செல்கிறார்.


சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு நன்று.


பாடல்கள், நடனம் ,இசை சுமார் ரகம்.


இறுதிக்காட்சியை மும்பை அரபிக்கடலில் நிற்கும் ஒரு கப்பலில் எடுத்துள்ளது சிறப்பு.


படத்தில் ஆக்சன் உண்டு.திரில் இல்லை...வழக்கம்போல இறுதியில் நம்ம நாட்டு செகரட்டரியை கைகாட்டுகிறர்ர்கள்.

 மனதை தொடும் சில காட்சிகள் உண்டு.குறிப்பாக அரசியல்வாதியிடம் ஹீரோ புதுக்கோட்டை ராணுவ வீரன் பற்றி சொல்லும் நிகழ்வு.
 நகைச்சுவை வசனங்கள் படத்திற்கு வலுச்சேர்க்கிறது.
அதிலும்..

ஆயிரம் பேரை அழிக்க உயிர கொடுக்குறான்,ஆயிரம் பேர காக்க உயிர கொடுக்க கூடாதா?


ஹீரோ ஒரு பக்கம் துப்பாக்கியுடனும்,மறுபக்கம் சத்யன்,ஜெயராம்,காஜலுடன்   காமெடி பண்ணிக்கொண்டிருக்கிறார்.


SLEEPER CELL தீவிரவாதிகளை அழிக்க ஹீரோ வகுக்கும் வியூகம் அனைத்தும் லாஜிக் பார்க்காதவறை ஒகே...

மற்றபடி லாஜிக்கில் நிறைய ஓட்டை..

குறைகளாக தெரிவது

1)
SLEEPER CELL அமைப்பு எதற்காக குண்டு வைக்கிறார்கள் அதனால் அவர்களுக்கு  என்ன இலாபம்? என்பதை தெளிவு படுத்தவே இல்லை..அடிப்படையே குழப்பம்... ஒருவேளை காஷ்மீர் தீவிரவாத லிஸ்டில் இவர்களையும் சேர்த்துவிட்டார்களா?

2)
12 தீவிரவாதிகளை சுடும்போது எல்லோரும் சாதாரண ட்ரஸ்தான் போட்டு இருந்தார்கள்.ஹீரோ மட்டுமே கோட் சூட் போட்டிருந்தார்.பிறகெப்படி கோட் சூட்டை வைத்து வில்லன் கண்டுபிடித்தார்.அதுவும் கோட் சூட் திருமணத்திற்கு மட்டும்தான் போடுவார்களா?

3)
5பெண்களையும் ஹீரோ காப்பாற்றும்போது தீவிரவாதிகள் அனைவரும் துப்பாக்கியால் சரமாரியாக சுடுகிறார்கள்.ஆனால் ஒன்றுகூட ஹீரோ மேல் படல்..ஹீரோ சுட்டா மட்டும் .பொசுக் பொசுக்னு சாகுறானுங்க....ஒவர் ஹீரோயிசம்.

இன்னும் ஏராளம்.

Dedicated To Members Of  Indian Army And Their Families

என்று முடித்திருப்பது நன்று.

மொத்தத்தில் வழமையான கதையை திரைக்கதையில் சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

துப்பாக்கி - நிஜத்தை சுட்டது.
 நன்றி:)

                                                                                                                                                               
                           
Tamil 10 top sites [www.tamil10 .com ] Buzz இல் பின்தொடர்க
 Add to Google Reader or Homepage Subscribe in Bloglines Add to My AOL Add to Pageflakes Powered by FeedBurner Add to fwicki Add to The Free Dictionary