கடிதம்

தன்னை பெண் பார்க்க வரப்போகும் கண்னனுக்கு தான் எழுதிய நான்கு வரி மொட்டை கடிதத்தை போஸ்ட் செய்தாள் லெட்சுமி .தனக்கு எல்லா விதத்திலும் தகுதியான கண்னன் ,அந்த கடிதத்தை படிப்பதால் தன் திருமண வாய்ப்பு பெரிதும் பாதிக்ககூடும் என முழுதும் தெரிந்தும் தான் செய்வது சரியே என சமாதானம் செய்து கொண்டாள்.
பெண் பார்க்கும் படலம் முடிந்தவுடன் அவளிடம் தனியாக பேச வேணும் என்றான் கண்ணன்.

உங்களைப்பற்றி யாரோ அவதூறாக எனக்கு கடிதம் எழுதியிருக்காங்க.உங்களுக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லைனு கடிதத்தில் எழுதியிருக்கு .எதுவா இருந்தாலும் சம்பந்தவங்ககிட்ட நேரடியா கேட்டு விடுவது என் வழக்கம்.தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க
என்று அந்த நாலுவரி கடிதத்தை அவளிடம் கொடுத்தான் கண்னன்.

இன்னொருத்தர் மூலமா கேட்பதைவிட , நாமே சம்பந்தப்பட்டவரிடம் பிரச்சினைகளுக்கு நேரடியாக விளக்கம் கேட்பது வாழ்க்கையில் சந்தேகங்களை வலுவிழக்கச்செய்து ,உறவுகளை பலப்படுத்தும்.உங்களோட இந்த குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.உங்களை சோதிக்கத்தான் நானே இந்த கடிதத்தை எழுதினேன்.உங்களுக்கு மனைவியாவதற்கு நான் கொடுத்து வச்சிருக்கனும் என்று வெட்கப்பட்டாள் லெட்சுமி..

                                                                                                                                                               
                           
Tamil 10 top sites [www.tamil10 .com ] Buzz இல் பின்தொடர்க
 Add to Google Reader or Homepage Subscribe in Bloglines Add to My AOL Add to Pageflakes Powered by FeedBurner Add to fwicki Add to The Free Dictionary