காதல் ரகசியமானது
காதல் மிகவும்
ரகசியமானது.
அதனால் தான்
பலரும்
சொல்வதில்லை
காதலியிடம் கூட
இரண்டிலிருந்து
ஒன்றைக் கழித்தால்
பூச்சியமாகும்
வியப்புக் கணிதமே
காதல்
கண்ணைப் பார்த்து
சிரிப்பதில் தான்
காதலென்று நினைத்தேன்.
மண்ணைப் பார்த்துச்
சிரித்தால் தான் காதலென்று
கற்றுக் கொடுக்கிறாய்
நீ
பிறருடன்
செல்பேசுகையில்
வார்த்தைகள் தீர்ந்து விடுகின்றன
உன்னுடன்
பேசுகையில்
பாட்டரி தீர்ந்து விடுகிறது.
உன்னைக்
காதலிக்கத் துவங்கியபின்
எல்லாவற்றையும்
நிறுத்தி விட்டேன்.
எல்லாவற்றையும்
நிறுத்திய என்னால்
உன்னைக் காதலிப்பதை மட்டும்
நிறுத்த முடியவில்லை !
காதல் இல்லா
வாழ்க்கை
சிலவற்றை இழக்கும்.
காதலைச் சொல்லா
வாழ்க்கை
காதலையே இழக்கும்.