பகல் இரவாக;
இளமை மூப்பாக;
மொட்டு மலராக;
பிறப்பு இறப்பாக;
வர்ணங்களும் மாறுகின்றன.
வார்த்தைகளும் மாறுகின்றன.
மொழிகள் மாறுகின்றன-அதன்
வழிகளும் மாறுகின்றன.
உண்மைகள் பொய்யாக;
பொய்கள் உண்மையாக;
கனவுகள் நிகழ்வுகளாக;
நிகழ்ந்தவை கனவுகளாக;
அரசுகளும் மாறுகின்றன.
அரசியல்களும் மாறுகின்றன.
காலங்கள் மாறுகின்றன - அதன்
காட்சிகளும் மாறுகின்றன.
மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன....
இந்த அண்டத்தின்
ஒவ்வொரு அனுவிலும்....
ஒவ்வொருவர் வாழ்விலும்...
ஒவ்வொரு கணத்திலும் ...
மாற்றங்கள் நம்மை மாற்றிக்
கொண்டே இருக்கும் போது
நாம் மாறாமல் பார்த்துக் கொள்வதின்
பெயர்தான் காதல்