விழும் வரை
காத்திராமல் மழை நீரை
உன் கைகளில் ஏந்தினாய்.
வாடும் வரை
காத்திராமல் மலர்ந்த பூவை
உன் கேசத்தில் சூடினாய்.
பார்க்கும் வரை
காத்திராமல் என் நெஞ்சில்
உன்னை எற்றி விட்டு போனாய்.
ஆனால்
ஏன் என் காதலை
நான் சொல்லும் வரையில்
காத்திராமல் நீ
ஓடி ஒளிந்து போகிறாய்.
கண்கள் கலக்க வேண்டிய நேரத்தில்
இதயங்கள் இணையும் தருணத்தில்
காத்திருத்தலும் சுகம் தான் காதலியே!
ஆகவே இதற்காக மட்டுமாவது நீ காத்திரு.
சில நொடிகளில் சொல்லிவிட
என் காதல் ஹைக்கூ இல்லையடி!
காலம் முழுதும் நாம் படித்து படித்து
களிக்க வேண்டிய கம்பன் கவி.
உன் மேல் இருக்கும் என் காதலை
நான் உன் மேல் காட்டவே யுகங்கள் பல ஆகுமே!
காத்திராமல் நீ ஓடிக் கொண்டிருந்தால்
என்னை விட்டு என் உயிர் கூட போகுமே!
ஆகவே காதலியே!
நீ
இதற்காக மட்டுமாவது
காத்திரு...