ஆர்குட்(Orkut)-தகவல்,குற்றம் ,சுவாரஸ்யம்

ஆர்குட்:-
ஆர்குட் பற்றி தெரியாதவர்கள் இன்று இணையத்தில் குறைவு.ஒருவேளை நீங்கள் ஆர்குட்டில் இல்லையென்றால் இணையலாமே
 www.orkut.com

ஆர்குட்ல இணைந்தால் எனக்கு என்ன கிடைக்கும்??? நீங்க கேட்கலாம் நல்ல கேள்வி:---

1.Girl Friend கிடைக்கும்
2.Boy Friend கிடைக்கும்.
3.கூடவே அல்வாவும் கிடைக்கும்
ஆர்குட் அறிமுகம் (புதியவர்களுக்கு மட்டும்):-

ஆர்குட் இன்று உலகின் மூன்றாவது மிகப்பெரிய சமூக வலைத்தளம்.. நாம் தவறவிட்ட பள்ளி,கல்லூரி,நட்பை,உறவை,அடையாளம் காட்டவும்..
பல நல்ல தகவல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளவும் அமைக்கப்பட்ட ஒரு மிக அருமையான சமூக வலைத்தளம்தான் ஆர்குட்.இதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது நம்மை பொருத்ததுதான்.
நல்லவையும்,தீயவையும் எல்லா இடத்திலும் உண்டு அதுபோல் இங்கும் அதிகம்தான்.ஆர்குட் பயணர்கள் விவரம்:-

இன்றைய நிலையில்(26.3.2011)
ப்ரேசில் நாட்டவர்கள் 50.60% ம்
நம் இந்தியர்கள் 20.44% ம்
அமெரிக்கர்கள் 17.78% ம் ஆர்குட் பயணர்களாக உள்ளனர்.மேலும் தெரிந்துகொள்ள
http://www.orkut.com/Main#MembersAll
ஆர்குட்டில் வலம்:--

ஆர்குட்டில் பலர் வலம் வருவதற்கு முக்கிய காரணம் எதிர்பாலினத்தின்(ஆண்,பெண்) மீதான கவர்ச்சிதான் அப்டின்னு ஒரு கருத்து நிலவுகிறது.என்னைப்பொருத்தவரை இது ஆர்குட்டில் மட்டுமல்ல பல சமூக வலைத்தளங்கள் சிறப்பாக இயங்குவதும் இத்னால்தான்... ஏன் இன்னும் சொல்லப்போனால் இந்த உலகம் இயங்குவதே இதனால்தானே!!!!ஆர்குட் குற்றங்கள்:-

ஆர்குட்ல மட்டுமில்லாது இன்று இனையத்தில் எல்லா இடங்களிலுமே குற்றங்கள் தினமும் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளது.ஆனால் பெரும்பாலான இணைய குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில்லை என்பதுதான் உண்மை.ஆர்குட்டில் வெகுசில குற்றங்கள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.இனைய குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.ஆர்குட்டில் பதிவர்கள்(orkut communities):-

வலையில் எப்படி பதிவர்கள் இருக்கிறார்களோ அதுபோல் ஆர்குட்டிலும் தங்களுக்கென்று ஒரு குழுமம்
அமைத்தோ, அல்லது பிடித்த குழுமத்தில் இனைந்தோ அவர்களது கருத்துக்களை எழுதுபவர்கள் உண்டு.
என்னைப்பொருத்தவரை ஆர்குட்டில் எழுதுவது என்பது நேரத்தை வீணடிக்கும் செயல்தான்.என்ன காரணம் என்றால்

1.தேடலில்(கூகிள் தேடல்) நம் எழுத்துக்கள் வருவதில்லை.தற்போது தேடலில் இடம்பெறப்போகிறது என ஆர்குட்(கூகிள்)அறிவித்துள்ளது என்றாலும் இதில் சாத்தியம் குறைவு என்பது மட்டும் உண்மை.

2.ஆர்குட் பிழை(orkut bug)பிழையில் பலவகை உண்டு
ஆதலால் நம் பதிவு எப்போது வேண்டுமானாலும் அழிய வாய்ப்பு உண்டு.

3. நிர்வாகிகள் எப்போது வேண்டுமானாலும் நம்பதிவை அழித்துவிடலாம்(சொந்த குழுமமாக இருந்தால் இதிலிருந்து தப்பிக்கலாம்) .

4.அதிகப்படியான புகார்கள் (report abuse) கொடுக்கப்பட்டால் குழுமமே கூட தடைசெய்யப்படலாம்.

இன்னும் சில காரணங்களும் உண்டு.ஆதலால் நீங்கள் ஆர்குட்டில் எழுதுவதைவிட வலையில் எழுதுவதே சிறப்பு.


ஆர்குட்கணக்கு அபகரிப்பு(orkut profile hacked):-

உங்கள் orkut profile(ஆர்குட் கணக்கை)யாராவது அபகரித்துவிட்டால் என்ன செய்யனும்???
கீழே உள்ள இனைப்பை கிளுக்கி அதன் வழி தொடருங்கள்
http://help.orkut.com/bin/static.py?page=troubleshooter.cs&problem=account_compromised&master=account_compromised&Action.Search=Continue&hl=en-US&p=FlagProfile.aspxபிஷிங்(phishing)ல உங்கள் கனக்கு போச்சுனா
கீழே உள்ள இணைப்பை கிளுக்கி form ஐ பூர்த்தி செய்யுங்கள்
https://www.google.com/support/accounts/bin/request.py?ara=1&hl=en
ஆர்குட் சுவாரஸ்யங்கள்:--

Orkut Buyukkokten is a Gay???

ஆர்குட்டை உருவாக்கியவர் Orkut Buyukkokten என்பதை அறிந்திருப்பீர்கள்.
அவர் சமீபத்தில் Derek Holbrook என்ற ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களது திருமணம் கலிஃபோர்னியா உயர்நீதிமன்றத்தில் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது.
சாட்சி கையெழுத்தை Marissa Mayer (Vice President of Search Product and User Experience at Google)போட்டார்.

என்னே ஆச்சர்யம்!!!!!!!!மேலே உள்ள படத்தில் Derek Holbrook,Marissa Mayer(நடுவில்), மற்றும் Orkut Buyukkokten.எதிர்பாலினத்தை மட்டும் பார்க்க:-

உங்கள் நண்பர்களின் நட்பு பட்டியலில் எத்தனை ஆண்கள் ,எத்தனை பென்களை பார்க்க வேண்டுமா???(இந்த பிரச்சினை பல பேருக்கு உண்டு)

ரொம்ப சுலபம்
1.உங்கள் நண்பரின் profile க்கு செல்லுங்கள்.
2.click view all friends
3.seach box இல் male என்று டைப் செய்து தேடுங்கள்
அதே போல் female என்று டைப் செய்து தேடுங்கள் கிடைக்கும்.மற்றொரு வழி:-
http://www.orkut.com/Main#FriendsList?uid=1268193523079180550&q=male
http://www.orkut.com/Main#FriendsList?uid=1268193523079180550&q=femaleஎப்படி சாத்தியம்???:-

கீழே சொல்லப்போறதெல்லாம் மாயமோ மந்திரமோ இல்லங்க...எல்லாமே தந்திரம் தான்
எல்லாவற்றிற்கும் எதோ ஒரு காரணம் அல்லது ஏமாற்று வேலை இருக்கு.

orkut fans(bug):-

இவருக்கு இருக்குறதே 25 நண்பர்கள் தான் fans பாருங்க 16,176 fans
என்ன கொடுமை இது...
http://www.orkut.com/Main#Profile?uid=12376043436795884490

மற்றொருவர்
http://www.orkut.com/Main#Profile?uid=3405859496426001928

அதே மாதிரி இன்னொருவரும்
http://www.orkut.com/Main#Profile?uid=4818171025287943583பார்க்க இயலாத குழுமம்(invisible community):--

தமிழின் முதல் invisible community மற்றும் invisible topic கீழே
http://www.orkut.com/Main#Community?cmm=95584457Orkut Universal Profile:
இத கிளிக் பன்னினால் உங்களின்(யார் கிளிக் பன்றாங்களோ அவர்களின்) முகப்பு பக்கத்திற்கே செல்லும்
http://www.orkut.com/Profile.aspx???2pid=11731517960896443124

Orkut Universal Scrapbook:
இத கிளிக் பன்னினால் உங்களின்(யார் கிளிக் பன்றாங்களோ அவர்களின்)ஸ்கிராப் புத்தகத்திற்கே செல்லும்
http://www.orkut.com/Scrapbook.aspx?2uid=6849219260034274333சில சிறப்பு வாய்ந்த குழுமங்கள்:---

1.லோக் சபா
http://www.orkut.co.in/loksabha2009

2.ஆர்குட்
http://www.orkut.co.in/Main#Community?cmm=95114051ஆர்குட்டின் மிகப்பெரிய குழுமங்கள்(Biggest Communities on Orkut):--
1. Eu amo a minha MÃE! (I love my MOTHER!)
http://www.orkut.com/Main#Community?cmm=176183


ஆர்குட் பெரிய வளர்ச்சியை எட்டவில்லையே ஏன்??:-

முக நூலைப்போல் உலக அளவில் ஆர்குட்டால் பெரிய வளர்ச்சியை எட்ட இயலவில்லை என்பது உண்மையே!!!

எனக்கு தெரிந்த சில காரணங்கள்:--

1.ஆர்குட் தளம் வலுவாக கட்டமைக்கப்படவில்லை..orkut bug மிக அதிகம்.
2.ஆர்குட்டில் போலிகள் மிக அதிகம்.
3.பெரும்பாலான குழுமங்கள் குறிப்பிட்ட என்னிவிடக்கூடிய 50 விளையாட்டுக்களையே திரும்ப திரும்ப விளையாடுகிறது.ஆர்குட் பொழுதுபோக்கு களம் தான் ஆனால் பொழுதுபோக்கு களம் மட்டுமே அல்ல...
4.பெரும்பாலான குழுமங்கள் வெறிச்சோடி கிடக்கிறது(செயலிழந்து விட்டது)
5.தமிழில் எடுத்துக்கொண்டால் ஒட்டு மொத்த குழுமங்களின் active user 1000 கூட இருக்குமா என சந்தேகமே!!!!!ஆர்குட் இத்தனை சிறிதா???வருத்தம் அளிக்கிறதே!!!

6.கூகிள் ஆர்குட்டிற்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே என்கருத்து.


என் குறள்.

நான் கற்றது கடுகளவு
கல்லாதது உலகளவு.
                                                                                                                                                               
                           
Tamil 10 top sites [www.tamil10 .com ] Buzz இல் பின்தொடர்க
 Add to Google Reader or Homepage Subscribe in Bloglines Add to My AOL Add to Pageflakes Powered by FeedBurner Add to fwicki Add to The Free Dictionary