ஆர்குட்ஆர்குட் இன்று உலகின் மூன்றாவது மிகப்பெரிய சமூக வலைத்தளம்.. நாம் தவறவிட்ட பல நட்பை,உறவை,அடையாளம் காட்டவும்..
பல நல்லதகவல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளவும் அமைக்கப்பட்ட ஒரு மிக அருமையான
சமூக வலைத்தளம்தான் ஆர்குட்.இதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது நம்மை பொருத்ததுதான்.
நல்லவையும்,தீயவையும் எல்லா இடத்திலும் உண்டு அதுபோல் இங்கும் அதிகம்தான்.


ஆர்குட்டை நிறுவியவர் திரு.ஆர்குட் பயுகோக்டென் என்ற துருக்கிய மென்பொருளாளர்.


இவர் கூகிள் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றும் முதல் பத்து பேரில் ஒருவர்.
படித்தது bsc மற்றும் phd.ஸ்டான்ஃபோர்ட் பலகலைக்கழகம்.


தற்போது இவரைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.

இவர் தனது ஸ்க்ராப் புத்தகத்தை படிப்பதற்கு 13 பேரை வேலைக்கு வைத்துள்ளார்.
நண்பர்கள் பட்டியலை சரிபார்க்க 8 பேரை வேலைக்கு வைத்துள்ளார்.
இவருடன் ந்ன்பராக இனைய விருப்பம் தெரிவிப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 20,000 பேருக்கும் மேலாம்..!
இவருக்கு வரும் ஸ்க்ராப்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 85,000 க்கும் மேலாம்...!

கூகிளில் இருந்து இவர் பெறும் பனம் நாள்தோறும் சில மில்லியன்களாம்..
நாம் பதிவு செய்யும்,ஸ்க்ராப் அனுப்பும்,புகைப்படங்களை பதிவேற்றும் ஒவ்வொன்றுக்கும்
இவருக்கு வருமானம்தான்.

இதைவிட முக்கியமான விசயம் இவர் 2009 ஆண்டின் முதல் பனக்காரராக வருவார் என எதிர்பார்க்க படுகிறதாம்.

இன்னும் ஏராளம் உண்டு இவரைப்பற்றி சொல்ல எது எப்ப்டியோ நாம் இவருக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும்.
இவர் ஏற்படுத்தி கொடுத்த ஆர்குட் வலைதளத்தை நாம் நல்ல வழிகளில் பயன்படுத்தலாமே.

உலகில் அதிகமாக ப்ரேசில் நாட்டவர்கள் 54 சதவிகிதமும்,இரண்டாவதாக 20 சதவிகித இந்தியர்களும் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் மட்டும் 30 மில்லியன் பேர் ஆர்குட்டை உபயோகிக்கிறார்கள்.
ஆனால் Social Networking தளமான ஆர்குட் வலைச்சேவை இந்தியாவில் மீண்டும் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது.
பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளுக்காக தேடப்பட்டு வரும் மும்பை நிழலுலக தாதாக்களான தாவூத் இப்ராகிம், சோட்டா ராஜன்,
சோட்ட சகீல், அபூசலீம் ஆகியோருக்கு ஆர்குட் தளத்தில் தொடங்கப்பட்டுள்ள இணையக்குழுக்களே காரணம். கடந்த சில வருடங்களாகவே
சில தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கிறது என்பதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதாலும்
ஆர்குட்டை இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை ஆங்காங்கே எழுப்பபட்டுவருகிறது.

இதை எதிர்த்தும் ஆங்காங்கே கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.


மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த வாழ்க்கையில் பயன்களும், பிரச்சனைகளுமாகவே அனைத்து நிகழ்வுகளும் இருக்கின்றன.
எதையும் சரியானவற்றுக்காய் சரியான விதத்தில் பயன்படுத்துகையில் மனித குலம் பயன்களைப் பெற்றுக் கொள்கிறது.
தவறுகளை நோக்கி நகர்கையில் அனைத்து கண்டுபிடிப்புகளும், புதிய விஷயங்களும் அதன் அர்த்தத்தை இழந்து விடுகின்றன.
கனியிருக்கக் காய்கவர்ந்தற்று என்று தான் ஆர்குட் பயன்பாட்டாளர்களையும் பார்த்துச் சொல்லத் தோன்றுகிறது.
ஆர்குட்டை விட மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களான பேஷ்புக் ,டிவிட்டர்,friendster இன்னும் பல இருந்தும் ஏனோ ஆர்குட் தான் என்னை கவர்ந்தது .இதற்கு காரணம் ஆர்குட் திறந்தவெளியாக உள்ளதால் கூட இருக்கலாம்..இதன் வெற்றிக்கும் இது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்..

இவருடைய ஒரு வலைத்தளத்தை பாருங்கள்.

http://www.stanford.edu/~orkut/
                                                                                                                                                               
                           
Tamil 10 top sites [www.tamil10 .com ] Buzz இல் பின்தொடர்க
 Add to Google Reader or Homepage Subscribe in Bloglines Add to My AOL Add to Pageflakes Powered by FeedBurner Add to fwicki Add to The Free Dictionary