ஆனந்த விகடன் இந்த வாரமாவது வாங்கிடனும்னு ஒரே முடிவுல வேலை முடிஞ்சு நிறுவனத்தின் பேருந்தில் பூன் லே வரை சென்று அங்கிருந்து ஒரு மணி நேர ரயில் பயணம்(MRT) லிட்டில் இந்தியாவை சென்றடைய...அங்கு சூர்யா ஹோட்டலில் புகுந்து ஒரு கட்டு கட்டுவிட்டு ஆனந்த விகடனை தேடிப்பயணம் .. முதல் கடையிலேயே கிடைத்துவிட்டது.இரண்டு டாலர் கொடுத்து வாங்கியாகிவிட்டது..!!! முதல்பக்கத்தை ஆர்வத்தோடு பார்த்தேன். இந்த இதழுடன் என்விகடன் கேட்டு வாங்குங்கள் அப்டின்னு போட்டு இருந்தது.கடைக்காரரிடம் என் விகடன் கொடுங்கள் என்றேன்.என்விகடன் வருவதில்லை தம்பி என்றார். சற்று நேரம் திரு திருவென முழித்துவிட்டு சரின்னேன் திரும்பிவரும்போது வாங்கிக்கிறேன்னு ஒரு பொய்ய சொல்லிட்டு எஸ்கேப்ப்... இரண்டு,மூன்று என கடைகள் ஏறி இறங்கியாகிவிட்டது எங்கும் என் விகடன் இலவச இணைப்பு கிடைக்கவில்லை. கடைசியாக நான்காவது கடை இங்குவிட்டால் பிறகு கஷ்டம்தான்.இங்கும் என்விகடன் கிடைக்கவில்லை.கடைக்காரரிடம் பேச்சுக்கொடுத்தேன்.ஏன் வருவதில்லை என கேட்டேன். அதற்கு கடைக்காரர்.. இந்தியாவிலிருந்து கொண்டுவரும் செலவு அதிகமாகுது தம்பி அதனால அங்கயே தூக்கி எறிந்து விட்டு வந்துடறோம்..இதுவே 2டாலர் என் விகடனையும் எடுத்துட்டு வரனும்னா 4டால்ர் விற்க வேண்டி வரும் அந்த அளவுக்கு விலை கொடுத்து வாங்க மலைப்பார்கள் தம்பி என்று சொன்னார். இவர் சொல்வது எந்த அளவு உண்மை என்பது எனக்கு தெரியாது. சிங்கப்பூரில் மட்டும் எப்படியும் சில ஆயிரம் ஆனந்த விகடன் விற்பனை ஆகும் .அப்படி இருக்க சில ஆயிரம் என் விகடன் களை தூக்கி எறிவதற்கு பதில் அதை பிரசுரிக்காமலே இருக்கலாமே..!!! இதுபற்றியெல்லாம் ஆனந்த விகடன் தான் விசாரிக்க வேண்டும்.எனக்கு கிடைத்த தகவலை கொடுத்து விட்டேன். மேலும் விவரங்களுக்கு என் மின்னஞ்சல் முகவரியை விகடனுக்கு அனுப்பியுள்ளேன்.விவரம் தேவைப்படுமாயின் தாராளமாக தொடர்பு கொள்ளலாம். மேலே படத்தை பாருங்கள் முதல்பக்க்த்தின் முதல் வரியிலேயே தமிழ் வார இதழ்களில் நம்பர் 1 என்னே ஆச்சர்யம்..!!!! தமிழின் சிறந்த வார பத்திரிக்கை,தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய ஒரு பத்திரிக்கை இப்படி முதல் பக்கத்திலேயே ஆங்கிலத்தை கலக்க வேண்டிய அவசியம் என்ன??? அதற்கு பதில் தமிழ் வார இதழ்களில் முதலிடம் என அழகு தமிழில் போடலாமே..!!!! இதை விகடன் பரிசீலித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்...!!!! மற்றபடி ஆனந்த விகடனைப்பற்றி சொல்லவே தேவையில்லை..அசத்தல் அசத்தல் அசத்தல்.. இங்கு எனக்கு குறைகளாக தெரியும் சிலவற்றை மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளேன். நிறைகள் ஏராளம்..!!!!அவை விகடனில் எப்போதும் தாராளம்..!!! வலைபாய்ந்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் |
ஆனந்த விகடன் -வலைபாயுதே
