ஒரு குட்டி தேவதை.
                       குட்டி தேவதை
ஐந்து நாள் நான்
வேறொரு உலகத்தில்
வாசம் செய்திருந்தேன்
ஒரு குட்டி தேவதையோடு!!!!!!!!

என் உறவுகளையெல்லாம்
தனதாக்கி என்னையும்
அவளுடைமை ஆக்கினாள்!!!!!!!!

என் பகல் இரவு
பறந்து போனது
அவள் என் கரம் பிடித்து
"ததக பிதகா" என
நடக்கும் போது!!!!!!!!!!!

பேசமட்டுமே பழக்கப்பட்ட நான்
கேட்கவும் தொடங்கிவிட்டேன்!!!!!!!

இவள் சட்டத்தில்
"ஐஸ்க்ரீம்" க்கு மட்டும் தான்
மூன்று முத்தங்கள்!!!!!!!!!!!!

தீர்ந்து போகும்
ஐஸ்க்ரீம் எல்லாம்
சபித்தவளாய் நான்...

என் அம்மாவிடம் பேச
அப்பா பக்கத்தில் உட்கார
அக்காவிடம் சண்டைபோட
எதற்கும் அனுமதி கிடைக்கவில்லை!!!!!!!!!!!

"அச்சச்சோ" என்றே சாய்க்கிறாள்
சாதிக்கிறாள் எல்லாவற்றையும்....

ஐந்து நாள் முடிந்தது
நான் வழியனுப்பப்பட்டேன்
நினைவை அவளிடம்
கொடுத்துவிட்டு
நிழலாய் நான்!!!!!!!!!

என் படிப்பு
என் கவிதை
என் வேலை
எனது நோக்கம்
எதுவும் எனக்கு
பெரிதாய் தோன்றவில்லை

திரிகிறேன் அவளது
ஆதிக்கத்தில் !!!!!!!!
ஆயினும் என்னை
பொம்மையாக்கி சிரிக்கிறது
ஒரு குட்டி தேவதை!!!!!!!!!!!!

-Mithra venkat
                                                                                                                                                               
                           
Tamil 10 top sites [www.tamil10 .com ] Buzz இல் பின்தொடர்க
 Add to Google Reader or Homepage Subscribe in Bloglines Add to My AOL Add to Pageflakes Powered by FeedBurner Add to fwicki Add to The Free Dictionary