இமைகளை திருடிக்கொண்டு
கனவுகளை கண்டு மகிழ் என கட்டளையிடுகிறாய்!!! அமைதியாய் இருந்துகொண்டு ,இம்சையை இனிமையாய் தருகிறாய்!!!
உன்னைப்பார்த்ததை தவிற
பிழையேதும் செய்யவில்லை நான்...
ஆனால் தவிப்பும் தாகமும் தண்டனையாய்பெற்றுக்கொண்டிருக்கிறேன். இவையாவும் இன்றுவரை நீ
அறியாமல் இருப்பதனால்
என் இதயப்பகுதி
புண்ணாய் எரிகிறது
இந்த தீராவலிதான்
காதலா!!!!!!!!!!!